திருவள்ளுவரின் திருக்குறள்
திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார்,
தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல
சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.
வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.
சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது.
தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு.
இந்நூலை பாராட்டித் தோன்றியது திருவள்ளுவமாலை.
இந்நூல் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும்
மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும்
ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.
அறத்துப்பால்-38 அதிகாரங்கள்
பொருட்பால்-70 அதிகாரங்கள்
காமத்துப்பால்-25 அதிகாரங்கள்
பொருட்பால்-70 அதிகாரங்கள்
காமத்துப்பால்-25 அதிகாரங்கள்
திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளதால், காலத்துக்கும் ஆசிரியரின் அறிவுக்கும் தகுந்தார் போல் இயலை மாற்றி அமைத்துள்ளனர்.
- அறத்துப்பால்
- * பாயிரவியல்
- * இல்லறவியல்
- * துறவறவியல்
- * ஊழியல்
- பொருட்பால்
- * அரசியல்
- * அமைச்சியல்
- * அரணியல்
- * கூழியல்
- * படையில்
- * நட்பியல்
- * குடியியல்
- காமத்துப்பால்
- * களவியல்
- * கற்பியல்
திருவள்ளுவர் மூன்று காலம் உணர்ந்த ஞானி. அவரால் எழுதப்பட்ட நூல் திருக்குறள். ஆதலால் மூன்று காலம் உணர்ந்த வல்லுநர்கலால் மட்டுமே திருக்குறளை உணர்ந்த கொள்ள முடியும்.சாதாரன மனிதனுக்கு ஒரு பொருளும் தவத்தில் உயர்ந்த உள்ளத்துக்கு வேறு ஒரு பொருளும் தெரியும்.சிவலிங்கத்தை குழந்தைகளுக்கு(சாதாரன மனிதர்) சொல்லி தந்த விதத்திலும் , மாற்றுப்பால் மீது பற்று கொண்டவர்களால் வேறு ஒரு பொருள் அதாவது ஆண் பெண் உறுப்பு என்றும் , கடவுளை கண்ட உயர்ந்த ஞானிக்கு உயிர் வடிவமாகிய கோளத்தின்(முட்டை) வடிவமாக தோன்றும் என்று பெரியோர்களின் கூற்று.
காமம் என்றால் ஆண் மீது பெண்னுக்கும், பெண் மீது
ஆணுக்கும் உள்ள காதல் தான் என்று தோன்றும். ஆனால் பெரியோர்கள் அதாவது
தவத்தில் உயர்ந்த நிலை நோக்கிப்பயணம் செய்கிறவர்கள் மனிதனுக்கும்
கடவுளுக்கும் உள்ள காதல் என்றும் சொல்லப்படுகிறது.
மிருகமாக பிறந்து மனிதனாக மாறுவோம், பின்பு கடவுளாக மாறுவோம். இதில்
மிருகமாக அப்படியே இருந்துவிடுவோம். மனித தன்மையிலிருந்து மிருகத்தன்மையும்
பின்பு
தெய்வத்தன்மையும் வரலாம்.எப்படி வேண்டுமானலும்
நடக்கலாம்.மிருகத்தன்மையிலிருந்து மனித தன்மைக்கும், மனித தன்மையிலிருந்து
தெய்வத்தன்மைக்கும் மாறுவதற்க்கு வழி
இத்திருக்குறளில் இருப்பதாக பெரியோர்களின் கூற்று.
அதிகாரம் ஒவ்வொன்றும் அனுபவத்தின் சொத்து. கடவுளை நோக்கி
பயணம் செய்தால் குறளில் உள்ள பொருளின் சூட்சமம் புரியும்.தமிழின் அறிவு,
இயற்கை அறிவு மற்றும் தவத்தினால் வரும் அநுபவம் சேரும்
பொழுது திருக்குறள் தன் சூச்சமத்தை வெளிப்படுத்திவிடும்.
வாருங்கள் கொஞ்சம் படிப்போம்....